தோற்றம் :

1958 இல் தொடங்கப்பட்ட திருக்கோயில் இதழ் இந்து சமயக் கோட்பாடுகள், திருக்கோயில் வரலாறுகள், மகான்கள் மற்றும் அடியார்களின் திருத்தொண்டுகள் மற்றும் வரலாறுகள், ஆன்மீகம் சார்ந்த வாழ்வியல் வழிகாட்டுதல்கள், அறக்கருத்துகள் ஆகியவை இதன் உள்ளடக்கங்கள். தமிழ் இலக்கிய, ஆன்மீக அறிஞர்கள் பலர் இதில் பங்கேற்று எழுதியுள்ளனர். கிருபானந்தவாரியார், ம.பொ.சிவஞானம், மு.அருணாச்சலம், கி.வா.ஜகந்நாதன், ந.சுப்புரெட்டியார், டி.என்.சிங்காரவேலு, அருணை வடிேவல் முதலியார், க.வச்சிரவேலர், கி.ஆ.பெ.விசுவநாதம், என்.சேதுராமன், க.த.திருநாவுக்கரசு, சுத்தானந்தபாரதியார், ச.வே.சுப்பிரமணியம், வ.சுப.மாணிக்கம், முனைவர் இரா.கலைக்கோவன், நாராயண வேணுகோபால நாயக்கர், மு.அருணகிரி, பாலகுமாரன், பிரேமாநந்தகுமார்,மஞ்சுளா ரமேசு மற்றும் இந்திய ஆட்சிப் பணியில் உள்ள பலர் இதில் பங்களித்துள்ளனர்.